29/09/2023 அன்று எமது உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்லத்தில் இருக்கும் பயனாளிகளுக்கும் ஏனைய பயனாளிகளுக்குமான விசேட மருத்துவ செயலமர்வு ஒன்று உயிரிழை பராமரிப்பு இல்லத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மனநல மருத்துவரினால் மனநல மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு சத்திர சிகிச்சை நிபுணர், அழுத்தப் புண்களினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் அழுத்தப் புண்களைப் பார்வையிட்டு அவர்களுக்கான மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்வுக்காக பிரபல மனநல மருத்துவ நிபுணர் Dr.சிவதாஸ், பொது சத்திரசிகிச்சை நிபுணர் Dr.சுதாகரன் ஆகியோர் வருகை தந்து பயனாளிகளுக்கான ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கியதோடு மேலதிக மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான திகதிகளையும் வழங்கினார்கள்.
இச்செயற்பாடு எமது பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ள சிறப்பான சேவையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.