Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

நாடக சிகிச்சை (Drama Therapy)

உயிரிழை

முல்லைதீவு மாவட்டத்தில் அமைந்துள்ள எமது உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளர்களின் உளநலத்தை மேம்படுத்தும் நோக்கில், மாஞ்சோலை வைத்தியசாலையின் உளவியல் மற்றும் சிகிச்சை நிபுணர்கள் எமது இல்லத்திற்கு 04.10.2025 அன்று வருகை தந்தனர்.

இந்த வருகையின் ஒரு பகுதியாக, ஒரு மணி நேரமாக நாடக சிகிச்சை (Drama Therapy) நடைபெற்று, பயனாளர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தம் குறைக்கவும், சமூக உறவுகளை மேம்படுத்தவும் உதவியான பல செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடகக் கலை, கதைகள், பாடல், ஆடல், பங்கு கோள் (Role Play) மற்றும் கற்பனை விளையாட்டுகள் போன்ற உளவியல் செயல்முறைகள் மூலம் பயனாளர்கள் தீவிரமாகக் கலந்துகொண்டு, மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தனர்.

இவ்வாறு மனநல மேம்பாட்டுக்கான இத்தகைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என எமக்கு நம்பிக்கை உள்ளது. மாஞ்சோலை வைத்தியசாலையின் மருத்துவ குழுவிற்கு எமது மனமார்ந்த நன்றி!

நினைவு நாள் அமரர் நீலாம்பிகை தியாகராசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *