Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட நிகழ்வு

Colombo Gateway International School

எமது உயிரிழை அமைப்பின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கும், கொழும்பு கழக சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட வீரர்களுக்குமான விளையாட்டு நிகழ்வு ஒன்று கடந்த 26.08.2023 அன்றைய தினம் Colombo Gateway International School Basketball Ground இல் நடைபெற்றது. இவ் விளையாட்டு நிகழ்வானது சினேகபூர்வமான ஒரு கண்காட்சி விளையாட்டு நிகழ்வாகவே  நடைபெற்றது.

இந்நாட்டிலுள்ள இயலாமைகளை கொண்டுள்ள நபர்களுக்கு உதவுவதற்கென நன்கொடைகளைத் திரட்டும் நோக்கமாக இக் கூடைப்பந்தாட்ட கண்காட்சிப்  போட்டி நடாத்தப்பட்டது. திரட்டப்பட்ட  நன்கொடை நிதியின் மூலம் இயலாமையைக் கொண்டுள்ள நபர்களுக்கு அத்தியாவசிய மருந்துகளையும், உபகரணங்களையும்  வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்மையிலேயே எமது விளையாட்டு வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன்  இவ் விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, ஒழுங்கமைத்த  Colombo Gateway International School  மற்றும் Colombo British International School ஒருங்கிணைந்த ஏற்பாட்டு குழுவினருக்கு எமது உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். அத்துடன் எமது விளையாட்டு நிகழ்வுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து தந்த திரு.செல்வன் அண்ணா (மண்வாசணை) அவர்களுக்கும் மற்றும் எமக்கான தங்குமிடத்தினை ஏற்பாடு செய்து தந்த  திருமதி Shreen saroor அவர்களுக்கும் எமது உயிரிழை அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மருத்துவ செயலமர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *