Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

உயிரிழை அமைப்பின் நன்றி அறிக்கை: இயற்கை அனர்த்த நிவாரணப் பணிகள் (நவம்பர் 2025)

உயிரிழை அமைப்பு
அன்புடன் மனித நேயம் மிக்க உலகத்தமிழ் உறவுகளுக்கு! கடந்த நவம்பர் மாதம் இலங்கையை உலுக்கிய கடும் மழை, புயல் மற்றும் சூறாவளி காரணமாக எமது நாடு பெரும் பாதிப்புகளைச் சந்தித்தது. இந்த இயற்கை சீற்றத்தினால் எமது ‘உயிரிழை’ அமைப்பைச் சேர்ந்த பயனாளிகளும், அவர்களது வாழ்வாதாரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த இக்கட்டான சூழலில், எமது மக்களின் துயரம் துடைக்க புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு கரங்கோர்த்தீர்கள். உங்களின் உடனடி நிதி உதவிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. எமது மனமார்ந்த நன்றிகள் எமது அழைப்பினை ஏற்று, நிதி பங்களிப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் ‘உயிரிழை’ அமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் உதவி வெறும் நிதி மட்டுமல்ல, அது பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் ஒரு பெரும் மருந்தாகும். அத்துடன், எமது இந்த மனிதாபிமானப் பயணத்தில் நீங்கள் எப்போதும் எங்களோடு இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது விருப்பமும் எதிர்பார்ப்புமாய் இருக்கிறது. பாதிக்கப்பட்ட எமது பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் மற்றும் அதற்கான நிதி பங்களிப்பு தொடர்பான விபரங்கள் கீழே மாவட்ட ரீதியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன: உங்களின் ஒவ்வொரு பங்களிப்பும் சரியான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இக்கட்டான நேரங்களில் நீங்கள் காட்டும் இந்த அன்பு, எமது அமைப்பைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. “துயர் துடைக்கத் தோள் கொடுப்போம் – மனிதநேயம் காப்போம்” நன்றி, நிர்வாகம், உயிரிழை அமைப்பு.   நிதியுதவி வழங்கல் அறிக்கை இந்த அறிக்கை புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவி எவ்வாறு இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களுக்குப் பகிரப்பட்டது என்பதை விவரிக்கிறது.
நிதி வழங்கியவர் / அமைப்பு நாடு தொகை
கைதடி உறவுகள் லண்டன் 470,000.00
திரு. திருமதி. சீதா ரவிமோகன் சுவிஸ் 10,000.00
செங்காந்தள் சுவிஸ் 98,867.53
திரு. சுதாகரன் கவிமன் சுவிஸ் 129,200.00
திரு. திருமதி. ராகினி சுதாகரன் சுவிஸ் 76,000.00
ஜனுயன் கனடா 111,100.00
Tamil Community Empowerment Council அவுஸ்திரேலியா 303,387.86
திரு. க. குவேந்திரன் அவுஸ்திரேலியா 149,383.15
திரு. சிதம்பரப்பிள்ளை தங்கநாதன் அவுஸ்திரேலியா 50,000.00
மண்வாசனை அமைப்பு கனடா 360,000.00
மொத்த நிதி 1,757,938.54
மாவட்ட ரீதியான பகிர்ந்தளிப்பு (Distribution Details)
வரிசை மாவட்டம் / விபரம் பயனாளிகள் எண்ணிக்கை
1 கிளிநொச்சி 35
2 முல்லைத்தீவு 53
3 வவுனியா 20
4 யாழ்ப்பாணம் 18
5 திருகோணமலை 06
6 மன்னார் 11
7 மட்டக்களப்பு 19
8 பணியாளர்கள் 11
மொத்த பயனாளிகள் 173
நாடுரீதியான நிதிப் பங்களிப்பு சுருக்கம்  
நாடு மொத்தத் தொகை
அவுஸ்திரேலியா 502,771.01
கனடா 471,100.00
லண்டன் 470,000.00
சுவிஸ் 314,067.53
 
நாடக சிகிச்சை (Drama Therapy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *