Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள்

உயிரிழை

50வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

23/09/2025 அன்று, லண்டனைச் சேர்ந்த திரு அன்ரன் அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு, உயிரிழை பயனாளிகளுக்காக ரூ.40,000 நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்நிதி, உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்லப் பயனாளிகளுக்கான மருந்து, உணவு மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவியை வழங்கிய லண்டனைச் சேர்ந்த திரு அன்ரன் அவர்களுக்கு, உயிரிழை அமைப்பினர் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலமாகவும் வளமாகவும் வாழ வாழ்த்துகிறோம்.

மேலும்,  எங்களுடன் இணைந்து பயணித்தமைக்காக அவருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

நன்றி மறவாத மனம்

போரினால் சிதைந்த வீடுகளின் நிழலில்,
போராட்டக் களத்தில் விழுந்து வலி சுமந்தவர்களின்
உயிர்முழக்கம் இன்னும் காற்றில் ஒலிக்கிறது.

குண்டுகளின் காயத்தில் இரத்தம் சிந்தியவர்களும்,
விபத்துகள், நோய்கள் தழுவி வாடியவர்களும்,
இன்னும் நம்பிக்கையைத் தேடி நாளை நோக்கி நடக்கின்றனர்.

இவர்களுக்கு உதவும் மனப்பாங்கு —
கருணையின் கண்ணீரால் எழுதப்பட்ட நல்லுள்ளம்.
இனத்துக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களை
மறவாது நினைவில் நிறுத்தும் உறுதி.

அந்த நெஞ்சங்களுக்கு, அந்த கைகளுக்கு,
என்றும் மிகப் பெரிய நன்றியைச் செலுத்துகிறோம்.
அவர்கள் வாழ்வில் விதைத்த தியாகம்,
எம் தலைமுறையின் வேர்களில் நிலைத்திருக்கிறது.

 

என்றும் அன்புடன் உய‍ரிழை அமைப்பினர்.

 

 

இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *