17/08/2025 அன்று
அமரர் றாஸ்கரன் அபிஷேக அவர்களின் 02ஆம் ஆண்டு நினைவு நாள் உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகள் மற்றும் நிர்வாகத்தினரால் நினைவு கூரப்பட்டது.
அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் இணைந்து ரூ.25,000 நிதியினை அன்பளிப்பாக பராமரிப்பு இல்லத்துக்கு வழங்கியுள்ளனர். இந்நிதியை வழங்கிய குடும்பத்தினருக்கு உயிரிழை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமரர் றாஸ்கரன் அபிஷேக அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்வதோடு, இந்நல்லுள்ளம் கொண்ட குடும்பம் எமது அமைப்புடன் தொடர்ந்து இணைந்து பயணிக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.