Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

உயிரிழை நிர்வாகக் கட்டமைப்பு

உயிரிழை நிர்வாகக் கட்டமைப்பு

எமது அமைப்பின் யாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக எமது நிர்வாக சபை, பணிப்பாளர் சபை, போசகர் சபை மற்றும் ஒவ்வொரு உயிரிழை அங்கத்தவர்களின் செயற்பாடுகள் அனைத்துமே எமது உயிரிழை அமைப்பின் யாப்பின் பிரகாரமே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் எமது அமைப்பின் நிர்வாகச் செயற்பாடுகளைச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்காகவே ஒவ்வொரு மாதமும் அனைத்து நிர்வாக சபை உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று இந்த நிர்வாக சபைக்கூட்டங்கள் இடம்பெறும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 07 மாவட்டங்களின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர், பத்திராதிபதி உட்பட மொத்தம் 13 பேர் கொண்ட நிர்வாக சபையினர் இதில் கலந்து கொண்டு பயனாளிகளின் தேவைகள் மற்றும் அமைப்பின் முன்னேற்றம் தொடர்பாகக் கலந்துரையாடுவார்கள். இக்கூட்டத்தினை அமைப்பின் தலைவர் வழிநடத்திச் செல்வார்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போசகர்கள், பணிப்பாளர்சபை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் நிர்வாகசபையினர் தங்களது சாதக பாதக விடயங்களை, போசகர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினருக்குத் தெரியப்படுத்தி இதற்கான தீர்வுகளை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதோடு மட்டும்மல்லாமல் நிர்வாகசபையினருக்கும், பணிப்பாளர்சபை மற்றும் போசகர்சபையினருக்கும் இடையிலான ஒரு நல்லுறவைக் கட்டியெழுப்ப இது உதவியாக இருக்கும்.

பொதுக்கூட்டமானது இரண்டு முறை நடைபெறும். அதாவது ஒரு புதிய நிர்வாகசபையின் பதவிக்காலம் 02 ஆண்டுகள் என்பதால் ஆண்டுக்கொரு முறை இப்பொதுக்கூட்டம நடைபெறும். இரண்டாவது பொதுக்கூட்டமானது புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் ஒன்றுகூடலாகும். அந்த வகையில் முதலாவது பொதுக்கூட்டமானது அமைப்பினுடைய தலைவர் தலைமையில் இடம்பெறும். இதற்கு நடுநிலையாளராக எமது பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இருப்பார்.

முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் இதுவரை நடைமுறையில் இருக்கின்ற நிர்வாக சபையினரால் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற, எதிர்காலத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள விடயங்கள், கணக்கு விவரங்கள் யாவும் அனைத்துப் பயனாளிகளோடும் விரிவாக கலந்துரையாடி ஆராயப்படும். மற்றும் ஒவ்வொரு பயனாளியின் கருத்துகள் மற்றும் எமது அமைப்பை எவ்வாறு நல்ல முறையில் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வது என்ற கருத்துக்கள், அனைவரின் கருத்துக்களுக்கும் சம இடம் கொடுத்து உள்வாங்கப்பட்டு சிறப்பாக இக்கூட்டமானது நடைபெறும்.

நடைமுறையில் இருக்கின்ற நிர்வாக சபையினுடைய இரண்டாவது பொதுக்கூட்டமானது அடுத்த வருடத்தில் மீண்டும் கூடி வழமை போன்று மேற் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் கலந்துரையாடப்பட்டு இறுதியில் ஒரு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். இக் கூட்டத்திற்கு நடுநிலை வகிக்கின்ற பணிப்பாளர் சபை உறுப்பினர் அல்லது போசகரினால் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாகசபை கலைக்கப்பட்டு புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படும். நிர்வாக சபை முழுக்க முழுக்க பயனாளிகளால் மட்டுமே தெரிவு செய்யப்படும். பயனாளிகள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நடைமுறையில் உள்ள நிர்வாக சபை உறுப்பினர்களே மீண்டும் அடுத்த 2 வருடங்களுக்கு தங்களது நிர்வாகக் கடமைகளில் ஈடுபட முடியும். அப்படிப் பயனாளிகள் விரும்பாத பட்சத்தில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்படும்.

இதில் எமது யாப்பின் நடைமுறைகளுக்கு அமைவாக அமைப்பின் தலைவர் ஒருவர் நேரடியாக பயனாளிகள் மத்தியிலிருந்து தெரிவு செய்ய முடியாது. காரணம் தலைவராகும் ஒருவருக்கு ஏற்கனவே இந்த நிர்வாக சபையில் என்னென்ன வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன. இதனுடைய கணக்கு விவரங்கள் மற்றும் அலுவலக நிர்வாக செயற்பாடுகள் போன்றன கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதனால் பயனாளி ஒருவரை நேரடியாகத் தலைவராகத் தெரிவு முடியாது. மாறாக தலைவராகப் பொறுப்பேற்கும் ஒருவர் 02 வருடங்கள் நடைமுறையில் இருக்கின்ற நிர்வாக சபையில் பயணித்தவராக இருக்க வேண்டும் என்ற எமது யாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக இக்கூட்டம் நடைபெறும். இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு இருவர் முன்மொழியப்படுமிடத்து பொது வாக்கெடுப்பு இடம்பெறும். இதற்கமைய 2/3 பெருன்பான்மையுள்ளவர்கள் மேற்படி பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். பின்பு அவர்கள் மேற் குறிப்பிட்டது போல் பதவிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். பின்பு அவர்கள் மேற் குறிப்பிட்டது போல் எமது உயிரிழை அமைப்பின் யாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் தங்களது நிர்வாகக் கடமைகளைச் சிறந்த முறையில் கொண்டு செல்வார்கள்.

எமது உயிரிழை அமைப்பின் நிர்வாக சபைகள்

முதலாவது நிர்வாக சபை தெரிவும் (2011 – 2012) உயிரிழை அமைப்பின் ஆரம்பமும் 2011 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், வவுனியா வைரவப்புளியங்குளத்தில் உள்ள மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

முதலாவது நிர்வாக சபை (2011 – 2012)

தலைவர் – குமாரசாமி பிரபாகரன்

செயலாளர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

பொருளாளர் – ராஜீவ் சுவர்ணமுகி

உப தலைவர் – செல்வரத்தினம் ஆனந்தராசா

உப செயலாளர் – செல்வரத்தினம் டிகோனிஸ் பொன்கலன்

இந்நிர்வாக சபையானது ஆரம்பத்தில் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது.

இரண்டாவது நிர்வாகசபை (2013 – 2014)

தலைவர் – செல்வரத்தினம் ஆனந்தராசா

செயலாளர் – பாஸ்கரன் பார்த்தீபன்

பொருளாளர் – விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்

உப தலைவர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

உப செயலாளர் – T.ராஜேந்திரன்

பத்திராதிபதி – ராஜீவ் சுவர்ணமுகி

மூன்றாவது நிர்வாக சபையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு இணைப்பாளர் தெரிவு செய்யப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாக சபையாகவும் உருவாக்கம் பெற்றது.

மூன்றாவது நிர்வாகசபை (2015 – 2016)

தலைவர் – விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்

செயலாளர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

பொருளாளர் – சந்திரநாதன் அரவிந்தன்

உப தலைவர் – தீவராசா சிபிசன்

உப செயலாளர் – பாஸ்கரன் பார்த்தீபன்

பத்திராதிபதி – நேமிநாதன் பரமானந்தன்

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – சிவலிங்கம் இராமச்சந்திரன்
  • வவுனியா – முருகேசன்பிள்ளை தவச்செல்வன்
  • கிளிநொச்சி – கோவிந்தப்பிள்ளை ஶ்ரீகரன்
  • முல்லைத்தீவு – குமாரசாமி கோணேசன்
  • யாழ்ப்பாணம் – தர்மலிங்கம் பாலேந்திரன்
  • திருக்கோணமலை – சீவரத்தினம் கவிதா
  • மட்டு / அம்பாறை – தாமோதரம் குகதாஸ்

அடுத்து நான்காவது நிர்வாக சபையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் வைத்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதற்கமைவாக 02 வருடத்திற்கு ஒரு முறை நிர்வாகத் தெரிவு இடம்பெற வேண்டும் என்று பணிப்பாளர் சபையினர் எடுத்த முடிவினை பொதுச்சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆகவே, இந்நிர்வாகசபையில் சிறிய மாற்றங்களுடன் அந்த நிர்வாகசபையே மீண்டும் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.

நான்காவது நிர்வாகசபை(2016-2017)

தலைவர் – விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்

செயலாளர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

பொருளாளர் – சந்திரநாதன் அரவிந்தன்

உப தலைவர் – பாஸ்கரன் பார்த்தீபன்

உப செயலாளர் – குமாரசாமி கோணேசன்

பத்திராதிபதி – நேமிநாதன் பரமானந்தன்

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – சிவலிங்கம் இராமச்சந்திரன் / ராஜப்பு ஜீவதயானந்தன்
  • வவுனியா – முருகேசன்பிள்ளை தவச்செல்வன்
  • கிளிநொச்சி – கோவிந்தப்பிள்ளை ஶ்ரீகரன்
  • முல்லைத்தீவு – குமாரசாமி கோணேசன்
  • யாழ்ப்பாணம் – வேலு குமுதினி / நந்தகுமார் நவநேசன்
  • திருக்கோணமலை – சீவரத்தினம் கவிதா
  • மட்டு/அம்பாறை – அற்புதராசா அமலன்

ஐந்தாவது நிர்வாகசபை (2017)

தலைவர் – கோவிந்தப்பிள்ளை ஶ்ரீகரன்

செயலாளர் – விக்னேஸ்வரன் ஜெயகாந்தன்

பொருளாளர் – குமாரசாமி கோணேசன்

உப தலைவர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

உப செயலாளர் – வேலு குமுதினி

பத்திராதிபதி – நேமிநாதன் பரமானந்தன்

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – ராஜப்பு ஜீவதயானந்தன்
  • வவுனியா – அழகேசன் சாந்தகுமார்
  • கிளிநொச்சி – செல்வரத்தினம் டிகோனிஸ் பொன்கலன் / தியாகராசா அழகநாதன்
  • முல்லைத்தீவு – கந்தசாமி பகீரதன் / நந்தகுமார் நவநேசன்
  • யாழ்ப்பாணம் – அகத்தியர் ஆனந்தராசா
  • திருக்கோணமலை – சீவரத்தினம் கவிதா
  • மட்டு/அம்பாறை – தாமோதரம் குகதாசன்

2017 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த நிர்வாக சபையில் செயலாளராக பணியாற்றிய விக்னேஸ்வரன் ஜெயகாந்தன் அவர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு பொதுச் சபை தீர்மானம் எடுக்கப்பட்டு செயலாளராக இருந்த விக்னேஸ்வரன் ஜெயகாந்தன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கமைய புதிய நிர்வாக சபை திருத்தி அமைக்கப்பட்டது.

2018 மாற்றியமைக்கப்பட்ட நிர்வாகம்

தலைவர் – கோவிந்தப்பிள்ளை ஶ்ரீகரன்

செயலாளர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

பொருளாளர் – குமாரசாமி கோணேசன்

உப தலைவர் – விபுலானந்தன் ஹர்சன்

உப செயலாளர் – ஏபிரகாம் பிரதீபன்

பத்திராதிபதி – நேமிநாதன் பரமானந்தன்

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – ராஜப்பு ஜீவதயானந்தன்
  • வவுனியா – அழகேசன் சாந்தகுமார்
  • கிளிநொச்சி – செல்வரத்தினம் டிகோனிஸ் பொன்கலன்
  • முல்லைத்தீவு – கந்தசாமி பகீரதன்
  • யாழ்ப்பாணம் – அகத்தியர் ஆனந்தராசா
  • திருக்கோணமலை – சீவரத்தினம் கவிதா
  • மட்டு/அம்பாறை – தாமோதரம் குகதாசன்

2021 ஆம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்படி நடைமுறையில் இருந்த கோவிந்தபிள்ளை ஶ்ரீகரன் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரது நிர்வாக சபையால் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

2021 தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம்

தலைவர் – கோவிந்தப்பிள்ளை ஶ்ரீகரன்

செயலாளர் – செல்வரத்தினம் டிகோனிஸ் பொன்கலன்

பொருளாளர் – செல்வரத்தினம் ஆனந்தராசா

உப தலைவர் – குமாரசாமி கோணேசன்

உப செயலாளர் – கந்தசாமி பகீரதன்

பத்திராதிபதி – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – ராஜப்பு ஜீவதயானந்தன்
  • வவுனியா – அழகேசன் சாந்தகுமார்
  • கிளிநொச்சி – தியாகராசா அழகநாதன்
  • முல்லைத்தீவு – நந்தகுமார் நவநேசன்
  • யாழ்ப்பாணம் – அகத்தியர் ஆனந்தராசா

2022 தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகம்

தலைவர் – குமாரசாமி கோணேசன்

செயலாளர் – செல்வரத்தினம் டிகோனிஸ் பொன்கலன்

பொருளாளர் – பாஸ்கரன் பார்த்தீபன் / இசையாகப்பு ஜோன்கெனடி

உப தலைவர் – சுவக்கீன்பிள்ளை இருதயராஜா

உப செயலாளர் – விபுலானந்தன் ஹர்சன்

பத்திராதிபதி – யோகராசா புவிதரன்

மாவட்ட இணைப்பாளர்கள்

  • மன்னார் – சங்கரப்பிள்ளை அமிர்தலிங்கம்
  • வவுனியா – அழகேசன் சாந்தகுமார்
  • கிளிநொச்சி – தியாகராசா அழகநாதன்
  • முல்லைத்தீவு – இசையாகப்பு ஜோன்கெனடி
  • யாழ்ப்பாணம் – பொன்னுத்துரை சதீஸ்வரன்
  • திருக்கோணமலை – சீவரத்தினம் கவிதா
  • மட்டு/அம்பாறை – தாமோதரம் குகதாசன் / ரசிகன்
போசகர் குழாம்நிர்வாக சபைபணிப்பாளர் சபை
1. வைத்தியர் சிவசுப்ரமணியம் சிவதாஸ் மனநல வைத்திய நிபுணர் ஸ்தாபக போசகர், உயிரிழை.  
2. வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை.
1. தலைவர்
2. உபதலைவர்
3. செயலாளர்
4. உபசெயளாளர்
5. பொருளாளர்
6. பத்திராதிபதி
7. இணைப்பாளர் – கிளிநொச்சி
8. இணைப்பாளர் – முல்லைத்தீவு
9. இணைப்பாளர் – வவுனியா
10 . இணைப்பாளர் – மன்னார்
11. இணைப்பாளர் – யாழ்ப்பாணம்
12. இணைப்பாளர் –திருக்கோணமலை
13. இணைப்பாளர் – மட்டு/அம்பாறை
1. வைத்தியர் சிவஞானம் சுதாகரன் சிரேஸ்ட மனநல வைத்தியர்
2. திரு. செல்லத்துரை ஶ்ரீனிவாசன் சமூக சேவைகள் உத்தியோகத்தர்
3. திரு. கிருஷ்ணபிள்ளை வசந்தரூபன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
4. தலைவர்
5. செயலாளர்
6. பொருளாளர்
7. உபதலைவர்
8. உபசெயளாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *