Tamil Community Empowerment Councial Australia INC
எமது உயிரிழை அமைப்பின் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் அனைவரும் சக்கரநாற்காலி பயனாளிகள். இவர்கள் அனைவரும் தங்களது இறுதிக்காலம் வரைக்கும் சக்கரநாற்காலியின் உதவியுடனேயே தங்களது காலத்தைக் கடப்பவர்கள். ஆகவே, இவர்களது சக்கரநாற்காலியானது அடிக்கடி பழுதடைவதால் அவற்றைத் திருத்தி மீளப் பயன்படுத்துவதற்கான ஒரு இடம் இல்லாத காரணத்தால் Austarlian Tamil Community Empowerment Councial Australia INC ஊடாக இதற்கான நிரந்தர கட்டடம் ஒன்று அமைத்து 2019-10-30 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் Tamil Community Empowerment Councial Australia INC அமைப்பால் முதல் கட்டமாக ஒருவருக்கு 50,000/= வீதம், 20 பயனாளிகளுக்கு சுய தொழில் ஊக்குவிப்பு கடனாக 2020-01-15 அன்று வழங்கப்பட்டது. இது ஒரு மீள் சுழற்சியான வட்டியில்லா கடனுதவி. இக்கடனை எமது பயனாளிகள் மாதாந்தம் 2,500/= வீதம் மீள செலுத்த வேண்டும். அதில் பெறப்படும் தொகையில் மீளவும் புதிய பயனாளிக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.
வாழ்வாதார செயற்றிட்டமாகக் கூட்டுப்பண்ணை ஒன்று அமைப்பதற்காக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தால் 05 ஏக்கர் காணி பெறப்பட்டு இதில் ஆடுகள், மாடுகள், கோழி வளர்ப்பு மற்றும் மரக்கறி வகைகள் பயிரிடப்பட்டு இதனூடாக எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றது. இதற்கான ஆரம்ப வேலைகளுக்கான நிதியினை Tamil Community Empowerment Councial Australia INC அமைப்பினரே வழங்கியிருந்தனர்.