நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி
அமரர் வைரமுத்து சச்சிதானந்த சிவம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருடைய குடும்பத்தினர் உணவு மற்றும் மருத்துவ செலவுக்காக ரூபா ஒரு லட்சம் நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
உயிரிழை அமைப்பின் சார்பாக, அந்த உன்னத மனப்பான்மைக்காக குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அமரர் வைரமுத்து சச்சிதானந்த சிவம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அதேவேளையில், நேரடி யுத்தம், போரின் விளைவுகள், விபத்துகள் மற்றும் நோய்களின் காரணமாக முள்ளந்தண்டில் பாதிப்புற்று சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழும் எம் உறவுகள் அனைவருக்கும் உதவி செய்வதன் மூலம், எம்மோடு இணைந்து மனிதநேயப் பயணத்தில் கலந்து கொள்கின்ற குடும்பத்தினரின் செயல் எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
இனி வரும் காலங்களிலும் அவர்கள் எம்மோடு இணைந்து இப்பயணத்தைத் தொடர வேண்டுமென எம் அன்பார்ந்த வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி,
உயிரிழை நிர்வாகம்