Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

திரு திருமதி மாதங்கி அசோக் அவர்களின் செல்வப்புதல்வன் மாயோன் அவர்களின் முதலாவது பிறந்த தினத்தை 10/02/2025 அன்று அவரது இல்லத்தில் கொண்டாடி இருந்தார்.

மாயோன் அவர்களின் பிறந்த நாள் நினைவாக, 24/09/2025 அன்று, அவரது பெற்றோர்கள்  மாதங்கி அசோக் அவர்கள் ஆஸ்திரேலியாவில்  இருந்து ரூபா 2,05,000 (இரண்டு லட்சத்து ஐயாயிரம்) நிதி உதவி வழங்கியிருந்தார்.

அந் நிதி உதவியின் மூலம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 20 உறுப்பினர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ரூபாய் 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இத்தகைய நிதி உதவியை, உயிரிழை அமைப்பின் பயனாளி திரு இருதயராஜா அவர்களின் மூலம் கிடைக்கப்பெற்றோம். இந்த நிதியை பெற்று வழங்கிய இருதயராஜா அவர்களுக்கும், தாராள மனத்துடன் உதவி செய்த திரு திருமதி மாதங்கி அசோக் அவர்களுக்கும், உயிரிழை அமைப்பு சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், செல்வப்புதல்வன் மாயோன் அவர்களுக்கு இவ்வேளையில் உஉயிரிழை  அமைப்பினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தில் விழும்புன் அடைந்தவர்களாகவும், போராட்டத்தால் காயமடைந்தவர்களாகவும், அத்துடன் விபத்து மற்றும் நோய் காரணமாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பயனாளிகளாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

எங்கள் தொப்புள் கொடி உறவான தமிழ் உறவுகள், எங்கிருந்தாலும் நாங்கள் இருக்கின்றோம்; எந்த நிலையிலும் கவலைப்படத்தேவையில்லை என்பதனை எங்களின் மனதில் ஆழமாக விதைத்துள்ளனர்.

இந்த வேளையில் நாம் அனைவரும், அவர்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். எந்த நிலையிலும் எங்களை கைவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் புலம்பெயர் உறவுகள், உயிரிழை அமைப்பினருடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.

இவர்கள் மென்மேலும் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *