உலர் உணவுப் பொருள் வழங்குதல்

இன்றைய தினம் கனடாவில் இயங்கி வரும் New SpiceLand Foundation நிறுவனம், முள்ளந் தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பான உயிரிழை அமைப்பினருக்கு ஒரு மாதத்திற்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
இந்த உலர் உணவுப் பொதிகள், உயிரிழை அமைப்பின் தங்குமிடமான கோமில் சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு தை மாதத்திலிருந்து இன்றுவரை, குறிப்பாக புரட்டாதி மாதம் வரை, இத்தகைய உலர் உணவுப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள், மீன் இறைச்சி, மரக்கறிகள் போன்றவற்றுக்கான நிதி உதவியும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டு தை மாத பொங்கல் பண்டிகைக்காக ரூ. 6,50,000 நிதியும், அதே ஆண்டின் தை மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் ரூ. 26,06,505 பெறுமதிக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிதி உதவிகளை கனடாவைச் சேர்ந்த திரு. சுரேஷ் அண்ணா அவர்கள், இலங்கை கிளிநொச்சியில் வசிக்கும் சந்திரபோஸ் அண்ணா அவர்களின் ஊடாக தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.
இந்த வேளையில், மாதந்தோறும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி உதவி செய்து வரும் New SpiceLand Foundation நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு. சுரேஷ் அண்ணா அவர்களுக்கும், அதனை ஒழுங்குபடுத்தி வழங்கி வரும் சந்திரபோஸ் அண்ணா அவர்களுக்கும், உயிரிழை அமைப்பு சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி. வணக்கம்.


