Wheel Care
எமது பயனாளிகளின் கணினி அறிவை விருத்தி செய்யும்பொருட்டு மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றைக் கற்பித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கோடு 24-08-2020 அன்று Wheel Care – German அமைப்பினரால் (திரு.யோகி) ஒரு செயற்றிட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கணினிகளைக் கொள்வனவு செய்து வழங்கியதோடு எமது பயனாளிகளுக்கான கணினிப் பயிற்சிகளையும் வழங்கினர். எமது உயிரிழை அமைப்பின் பணிகளை கணினி மயப்படுத்தி இலகுவாகவும் துரிதமாகவும் துல்லியமாகவும் பணியாற்றும் நோக்கோடு மென்பொருள் ஒன்றை தயாரித்து வழங்கியதோடு மேலும் மென்பொருட்களை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு எமக்கான இணையத்தளம் உருவாக்கத்துக்கும் பயன்பாட்டுக்கும் தொடர்ந்து உதவி புரிந்ததோடு எமது அமைப்பின் பணிகளைக் கணினி மயப்படுத்தும் திட்டத்துக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்கிவருகின்றனர். மேலும், சிரட்டைக் கைத்தொழில் பயிற்சிப் பட்டறைக்கு ஒழுங்கு செய்ததோடு சிரட்டைக் கைத்தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் கொள்வனவு செய்து வழங்கியதோடு அதனை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.