IMHO
கடந்த 2012 ஆம் ஆண்டு IMHO நிறுவனத்துக்கும் எமது உயிரிழை அமைப்பிற்குமான தொடர்புகள் Dr.ஞானசேகரம் (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர்) அவர்களால் ஏற்பட்டது. அப்போது நாம் அவரிடம் கேட்டுக்கொண்ட விண்ணப்பங்களுக்கு அமைவாக எமது பயனாளிகளுக்கான நிரந்தர வாழ்வாதாரம் மற்றும் எமது போக்குவரத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் முகமாக, முதல் கட்டமாக 30 பேருக்கு முச்சக்கரவண்டிகளை வழங்குவதற்காகவும் அத்தோடு மிகவும் அவசியமான அணுகும் வசதிகளைக் கொண்ட மலசலகூடம் அமைப்பது தொடர்பாகவும் கதைக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் கட்டம் கட்டமாக நடைபெற்றன.