மருத்துவ அறை திறப்பு
எமது பயனாளிகளில் பாரிய அழுத்தப்புண்ணுடைய 10 பயனாளிகளை எமது பராமரிப்பு இல்லத்தில் வைத்துப் பராமரித்து வருகின்றோம். அப்பயனாளிகளுக்கான அழுத்தப்புண்ணிற்கு மருந்து கட்டுவதற்காகவும் அவர்களது மருத்துவ தேவைக்காகவும் தாதி ஒருவரை நியமித்து பயனாளிகளைப் பராமரித்து வருகின்றோம்.
மற்றும், எமது பராமரிப்பு இல்லப் பயனாளிகளின் மருத்துவ தேவைகளை நிறைவேற்றும் முகமாகவும் எமது பயனாளிகளைப் பார்வையிட வரும் மருத்துவர்கள் தங்கி அவர்களைப் பார்வையிடுவதற்குமான ஒரு மருத்துவ அறை இல்லாத போது நாங்கள் IMHO நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவ அறை அமைத்து 15-02-2019 அன்று Dr.ராஜம் அவர்களால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு எமது பயன்பாட்டுக்காக வழங்கி வைத்ததோடு மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.