Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

புத்தாடைகள் வழங்கி வைப்பு

புத்தாடைகள் வழங்கி வைப்பு

07.11.2023  அன்று இந்திய றோட்டறிக் கழகத்தினர் எமது உயிரிழை அமைப்புக்கு வருகை தந்து தீபாவளி தினத்தினை முன்னிட்டு எமது பயனாளிகளுக்கு உடைகளை வழங்கி வைத்துள்ளனர். அத்தோடு, அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிரந்தர வைப்புக்காக 70,000/= இந்திய ரூபாய் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில்    கலந்துகொண்டு புத்தாடைகளை வழங்கிய Rtn. Mokan Kumar Rotary Club, Ulsoor, Bangalore அவர்களுக்கு எமது மனமார்ந்த  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மற்றும், இந்நிகழ்வினை ஒழுங்கு படுத்திய எமது உயிரிழை அமைப்போடு தொடர்ந்து பயணிக்கின்ற Project Dhanvantari@ Srilanka Mentor Rtn.P.P.Dhanasekar அவர்களுக்கும் Rotary Club Members P.Navaran, Sivasubramanian, G.Shegar, R.P.Shelly, Ravikumar, Rotary Baya  ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

அத்தோடு, “கல்விச் சக்தி” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்கான மாலைநேரக் கற்கைநெறி ஒன்றினை இலவசமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிகவும் சிறந்த முறையில் செயற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். “கல்விச் சக்தி” என்ற தொனிப்பொருளின் கீழ் ZOOM செயலி ஊடாக இந்த மாலைநேர வகுப்புகள் இடம்பெறுகின்றன. இதில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயனுள்ள செயற்றிட்டத்தினைச் செயற்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *