மருத்துவ பரிசோதனை
17-10-2023 அன்று மாங்குளம் வைத்தியசாலை வைத்தியர் கிருஷ்ணவேணி அவர்கள் உயிரிழை பராமரிப்பு இல்லத்திற்கு வருகை தந்து, பயனாளிகளின் காயங்கள், இரத்த அழுத்தம் மற்றும் தோல் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்கியதோடு நீரழிவு நோய்க்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டு சிகிச்சை வழங்கினார்.
இவர்கள் மாதந்தோறும் ஒரு முறையேனும் உயிரிழைக்கு நேரடியாக வந்து, பயனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, அவர்களின் நோய்கள் தொடர்பாக ஆராய்ந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள அறிவுறுத்திச் செல்வது வழக்கம்.
மாங்குளம் வைத்தியசாலை வைத்தியரின் இச்சிறந்த சேவைக்கு உயிரிழை பயனாளிகள் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.