அரைக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டல்
எமது சுய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பும் நோக்கோடு எமது உயிரிழை அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள உயிரிழைக்கு உரித்தான காணியில் நிரந்தர அரைக்கும் ஆலை ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கனடாவில் வசிக்கின்ற அன்பர் ஒருவரின் நிதி அனுசரணையோடு இச்செயற்றிட்டம் 04-10-2023 அன்று இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாங்குளம் ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் திரு கஜன், சிரேஷ்ட சட்டத்தரனி திரு சிவபாலசுந்தரம், கனடாவில் இருந்து வருகை தந்த மனிதநேய உதவியாளர் திரு எடிசன், எமது உயிரிழை அமைப்பின் தலைவர், நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.