North East People Welfare Association

2020/ ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் முதல் North East People Welfare Association (வடக்கு கிழக்கு மக்கள் நலன் காப்பகம்) என்ற மனிதநேய அமைப்பு, உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ரூபா 5,000/- வீதம் தொடர்ச்சியான நிதி உதவி வழங்கி வருகிறது.
இவ்வுதவி, உயிரிழை அமைப்பின் ஊடாக 23 முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற பயனாளிகளுக்குப் வழங்கப்பட்டு வருவதுடன், அதே நேரத்தில் உயிரிழை அமைப்பைச் சார்ந்த இன்னுமொரு பயனாளிக்கு நேரடியாகவும் அந்த அமைப்பினால் உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், மொத்தமாக 24 முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற நபர்களுக்கு North East People Welfare Association அமைப்பு மாதாந்த நிதி ஆதரவை வழங்கி வருகின்றது.