Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

மருந்து வழங்கல்

எமது உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்ட பயனாளர்களுக்காக, அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2025 / 08 ம் மாதத்துக்கான மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டதுடன், கடந்த 2025/03 ம் மாதத்தில் இருந்து அந் நிறுவனத்தால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

இந்த சேவை “நம் உறவுகளுக்கு நாமே கை கொடுப்போம்” அமைப்பின் ஊடாக, கனடாவில் வசிக்கும் திரு. ஜெயம் அண்ணா அவர்களின் நிதி அனுசரணையில் நடைபெற்று வருகின்றது.

தொடர்ச்சியாக 8 பயனாளர்கள் இந்த அரிய உதவியினை பெற்று வருகின்றனர்:

  1. ஜே. மடு ராணி குருஸ்
  2. அ. ஜேசுதாசன் குரூஸ்
  3. வீ. சதீஸ்வரன்
  4. ச. அன்ரன் ஜோய்
  5. பி. பெனில்டஸ்
  6. ச. அமிர்தலிங்கம்
  7. இரா. ஜீவதயானந்தன்
  8. உ. யோகலட்சுமி

இத்தகைய அரிய உதவியை முறையாக ஒழுங்கமைத்து, பயனாளர்களிடம் சென்றடையச் செய்த கனடா நாட்டைச் சேர்ந்த ஷாம் அண்ணாவிற்கும் கனேடிய உறவுகளுக்கும் எமது உயிரிழை அமைப்பின் சார்பாக உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களின் இரக்கமுள்ள இதயம், எங்கள் பயனாளர்களின் வாழ்வில் ஒளியாக திகழ்கிறது.
இத்தகைய தொண்டுப் பணிகள் தொடர்ந்து நிலைத்திருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *