2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத மருந்து பொருட்களுக்கான நிதி அன்பளிப்பு.

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு
தேதி: 03.10.2025
உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்புக்கு, கனடா மண்வாசனை அமைப்பானது பல்வேறு நல உதவித் திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றது.
அந்த வரிசையில், மண்வாசனை அமைப்பின் ஊடாக, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான தேவையான மருந்து பொருட்களை கொள்வனவு செய்து வழங்குவதற்காக, கனடாவில் இயங்கி வரும் அமைதி மற்றும் மறு வாழ்வு அமைப்பினர் இணைந்து இருநூறு கனடியன் டாலர் (CAD 200) நிதியினை எமது அமைப்பிற்கு 03.10.2025 அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மேற்படி நிதியின் மூலம் எமது பராமரிப்பு இல்லப் பயனாளிகளுக்கான அக்டோபர் மாத மருந்து பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளன என்பது எமக்கு பெரும் மகிழ்ச்சியாகும்.
இன்றைய தினம் இவ்வுதவியை வழங்கிய அமைதி மற்றும் மறு வாழ்வு அமைப்பினருக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இவ்வுதவியை ஒழுங்கு செய்து தந்த மண்வாசனை அமைப்பினருக்கும் எமது இதயப்பூர்வ நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
இத்தகைய நற் பணிகள் எந்த தடையுமின்றி தொடர வேண்டுமென எமது மனப்பூர்வமான விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
– உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு