Australian Tamil Union

எமது அமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து எமது பயனாளிகளின் அவசர மருத்துவ சேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டோம். எமது உயிரிழை அமைப்புக்கான நோயாளர் காவு வண்டி ஒன்றினை Australian Tamil Union மற்றும் அவுஸ்ரேலியா வாழ் மக்கள் இணைந்து பெற்றுத் தந்துள்ளார்கள். இதற்கான நிகழ்வு 27.09.2023 அன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது . அன்றைய நாளில் எமக்கான வாகனம் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.

