Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

IBC தமிழ் & Lebara Foundation

IBC  தமிழ் & Lebara Foundation

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் ஊடாக Lebara Foundation ஸ்தாபகர்களில் ஒருவரான திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் எமது நிர்வாக சபையினரை யாழ்ப்பாணம் Tilko Hotel இல் வைத்து சந்தித்தித்தார். எமது உயிரிழை அமைப்பு என்றால் என்ன? எமது தேவைகள் என்ன? எமது அமைப்பின் பயனாளிகளின் விளக்கங்கள் தொடர்பாகக் கேட்டு அறிந்து கொண்டார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு கிளிநொச்சியிலுள்ள நண்பர்கள் விடுதியில் (Friends Hotel) வைத்து திரு.கந்தையா பாஸ்கரன் மற்றும் எமது அமைப்பின் பணிப்பாளர் சபையினர், நிர்வாக சபையினர் மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்ட மிகப்பெரிய ஒன்றுகூடல் ஒன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஏற்கனவே ஊதா அமைப்பினரால் வழங்கப்பட்டு வருகின்ற 5,000.00 ரூபா உதவித் தொகையுடன் திரு.கந்தையா பாஸ்கரன் ஊடாக 5,000.00 ரூபா சேர்க்கப்பட்டு மிகுதியாக இருக்கின்ற அனைவரையும் இணைத்து அனைவருக்கும் ரூபா 10,000.00 வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எமது பயனாளிகள் தங்களது மருத்துவம், வாழ்வாதாரம் போன்றவற்றினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் வளர்ந்து சென்றது.

அழுத்தப்புண்களால் பாதிக்கப்பட்ட எமது பயனாளிகளைத் தங்க வைத்து மருத்துவப் பராமரிப்பை மேற்கொள்வதற்கான பராமரிப்பு இல்லம் IBC தமிழ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு அதன் தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களினால் 12-05-2023 அன்று உயிரிழை அமைப்பிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கல்வி கற்கும் பயனாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்குமான  கற்றல் உபகரணங்கள், மேலதிக வகுப்புக்களுக்கான கட்டணங்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற கல்வி உதவித்திட்டங்களை Lebara Foundation அமைப்பு வழங்கியது.

எமது பயனாளிகளின் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட விளையாட்டுத் திறனை வளரத்துக் கொள்வதற்காகவும் மற்றும் ஏனைய எமது போக்குவரத்து அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்வதற்காகவும் எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க IBC தமிழ் நிறுவன தலைவர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்களினால் 2020 ஆம் ஆண்டு சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்தன

IBC தமிழ் நடாத்திய விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட சீட்டிலுப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற 500,000/= பணத்தைப் பயன்படுத்தி சிறு வியாபாரத்துக்கான கடை ஒன்று கட்டப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *