மண்வாசனை

கனடா CRDA மண்வாசனை அமைப்பினர் உயிரிழை ஒருங்கிணைந்த பண்ணையில் மாட்டுக்கொட்டகை, ஆட்டுக்கொட்டகை அமைத்துத் தந்ததோடு ஆடுகள், மாடுகள், கோழிகள் என்பவற்றைப் பெற்றுத் தந்துள்ளனர். தொடர்ந்தும் பண்ணைக்கான அபிவிருத்தி வேலைகளுக்கு உதவிபுரிந்து வருகின்றனர். கனடாவில் வசிக்கின்ற திரு. எடிசன் அவர்கள் மண்வாசனை அமைப்பு ஊடாக எமது பண்ணையில் தனது நிதிப்பங்களிப்பில் இரண்டு பெரிய கோழிக்கூடுகள் அமைத்துத் தந்துள்ளார். இவரும் மண்வாசனை அமைப்பின் ஊடாக உதவி செய்து வருகின்றார்.





