அன்னைமடி

அன்னைமடி அமைப்பினருக்கும் எமக்குமான ஒரு உறவு ஏற்பட்டு அன்னைமடி அமைப்பின் ஊடாக எமக்கான நிரந்தர வருமானத்தை மேம்படுத்தும் நோக்கோடு உணவகம் ஒன்று அமைக்கும் திட்டத்தினை ஆரம்பித்தோம். புதிய காணி ஒன்று ஒட்டுசுட்டான் பிரதேச்செயலகத்தினால் எமது உயிரிழை அமைப்பின் அலுவலகத்துக்கு அருகாமையில் வழங்கப்பட்டது. அக் காணியில் மிக வேகமான முறையில் நடைபெற்ற இச்செயற்பாடு கொரோனா தாக்கத்தினால் தடைப்பட்டது. அதன் முழுமையான வேலைகள் முடியாமல் இருந்தமையால் தற்போது அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.








