நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டது
உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகளின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக புதிய சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று கடந்த 05/11/2023 அன்று எமது பராமரிப்பு இல்லத்தில் நிரந்தமாக பொறுத்தப் பட்டது. இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் எமது பயனாளிகளின் குடிநீர் பிரச்சனையை சீர் செய்வதோடு மட்டுமில்லாமல் மேலதிகமாகக் கிடைக்கும் நீரினை விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தில் எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் உள்ளது. எனவே இப்பயனுள்ள உதவித் திட்டத்தினைச் செய்து தந்த North Carolinians for Peace Foundation (NCPF), USA உறவுகளுக்கும் அதன் நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது உயிரிழை அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகள்.