மோட்டார் சைக்கிள் வழங்கல்
25-09-2023 அன்று சென்னையைச் சேர்ந்த ரோட்டரி கழகம் தன்வந்திரி அமைப்பினரால் 115,000/= ரூபாய் பெறுமதியான மின்கலத்தால் இயங்கும், மூன்று சக்கரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள் உயிரிழை அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் ஞானம்ஸ் ஹொட்டலில் இடம்பெற்றது.
30-07-2023 அன்று உயிரிழைக்கு வருகை தந்திருந்த திரு. தனசேகர் (Rotary, Team Project Dhanvantari) அவர்களிடம் நாம், எமது உயிரிழை அமைப்பில் கழுத்துக்கு கீழே மற்றும் இடுப்புக்கு கீழ் முள்ளம் தண்டுவடம் பாதிக்கப்பட்ட பயனாளிகள் 250 பேருக்கு மேல் இருக்கிறார்கள். எமது பயனாளிகள் அழுத்த புண்களோடும் மன அழுத்தங்களோடும் தொழில் வாய்ப்புகள் இன்றியும் மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான மின்சாரத்தில் இயங்கும் மூன்று சில்லு சக்கர நாற்காலிகள், யெல் குசன் போன்றவற்றை தந்துதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அக்கோரிக்கைக்கு அமைய மின்கலத்தால் இயங்கும், மூன்று சக்கரங்கள் கொண்ட மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் பெயர் விவரம் பின்வருமாறு
- சிவக்குமார், ஆற்காடு ரோட்டரி சங்கம் – 30,000/=
- போஸ் தர்மலிங்கம், மாமல்லபுரம் – 13,200/=
- ஆறுமுகம், வேலூர் வடக்கு – 5,000/=
- J.கஜேந்திரன், காட்பாடி – 2,000/=
- சௌந்தர்ராஜன், சங்கராபுரம் – 1,000/=
- PTL. சங்கர், திருவண்ணாமலை – 1,000/=
- P. தாண்டவராயன், கலவை – 800/=
- P R.மணி, திருவண்ணாமலை – 800/=
- நித்தியானந்தம், காஞ்சி கிழக்கு – 270 /=
- பாண்டியன், செங்கல்பட்டு – 270/=
- வெங்கடேஷ் வரகுப்தா, சங்ககிரி – 500/=
மேலும் தாங்கள் எம்முடன் இணைந்து, மக்களுடன் கதைத்து எமது அமைப்புக்கு நிலையான வைப்பில் இடுவதற்கான நிதியினை சேகரிப்பதற்கு உதவுவதாகவும் கூறியிருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த தன்வந்தரி ரோட்டரி கழகமானது உயிரிழை அமைப்புக்கான தேவைகளை கண்டறிந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்வதை இட்டு உயிரிழை அமைப்பினர் தமது அன்பையும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.