Uyirilai

முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் அமைப்பு

யாழ் மாவட்ட பயனாளிகள் சந்திப்பு

யாழ் மாவட்ட பயனாளிகள் சந்திப்பு

உயிரிழை நிர்வாகத்தினரால்  ஒவ்வொரு மாவட்டமாக சென்று உயிரிழை பயனாளிகளை   சந்திப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, அதன் முதற்கட்டமாக 15/10/2023 அன்று யாழ் மாவட்ட பயனாளிகளை கைதடியில்  சந்தித்தனர்.

யாழ் மாவட்ட இணைப்பாளர் சதீஸ்வரன் அவர்கள்  பயனாளிகளை சந்திப்பதற்கான இடத்தினை ஒழுங்குபடுத்தி தந்திருந்தார். இச்சந்திப்பானது, பயனாளிகள் மாவட்ட இணைப்பாளர்களுடனான தொடர்பினைப் பேணுவது, நிர்வாகத்தினருடனான தொடர்பினைப் பேணுவது மற்றும் பயனாளிகள் மத்தியிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது.

இதுவரை காலமும் புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கப் படாதவர்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்பட்டது தொடர்பாகக் கூறப்பட்டது. உயிரிழை நிர்வாகத்தினருடனான தொடர்பினைப் பேணுவதற்கான மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவற்றைக் கையாளுவது தொடர்பாக பயிற்சி கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *